H I N D U I S M
(The Power And Main Religious In Around The World)
வெள்ளி, 5 பிப்ரவரி, 2016
சனி, 8 மே, 2010
அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்





மூலவர்:கணபதீஸ்வரர்.
உற்சவர்: உத்திராபசுபதீஸ்வரர்.
ஊர் : திருச்செங்காட்டங்குடி
மாவட்டம் : திருவாரூர்
தல சிறப்பு:
இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபசுபதீஸ்வரர் தற்போதும் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர் - 609 704. திருவாரூர் மாவட்டம்.
போன்: +91- 4366 - 270 278, 292 300, +91-94431 13025.
தகவல்:
பிரகாரத்தில் புஜங்கலலிதமூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரமூர்த்தி, கங்காளமூர்த்தி, பிட்சாடனார், திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர் என வரிசையாக எட்டு சம்ஹாரமூர்த்திகள் காட்சி தருவது விசேஷம்.
இவ்வாறு அட்ட வீரட்ட தலங்களிலுள்ள சுவாமிகளையும் இங்கு தரிசிக்கலாம். தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், அசுர மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்றவர் இவர்.
சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் வில்லுடன் காட்சி தருவது சிறப்பு. சிறுதொண்டரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்ற சிற்பம், உள்ளது.
பிரகாரத்தில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, நால்வர், சங்கநிதி, பதுமநிதியுடன் நாகர், இரட்டை பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை: செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டுபவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம். கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்:சுவாமி, உத்திராபசுபதீஸ்வரர், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தலபெருமை: உத்திராபசுபதீஸ்வரர்: மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறத்தில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் உத்திராபசுபதீஸ்வரர் இருக்கிறார். இவரே இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்படுகிறது. கைகளில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் இவர் காட்சி தருகிறார். முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பரஞ்சோதி என்பவர், பல்லவ மன்னரின் போர்ப்படை தளபதியாக இருந்தார். சிவபக்தரான இவர், சிவனருளால் பல போர்களிலும் வெற்றி வாகை சூடினார். பரஞ்சோதியாரின் பக்தியையும், சிவத்தொண்டையும் அறிந்த மன்னன், அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அது சிவனுக்கே நேர்ந்ததாகும் என கருதி, அவரை சிவத்தொண்டு செய்யும்படி வேண்டிக்கொண்டான். அவரும் ஏற்றுக்கொண்டார். திகைத்த சிறுத்தொண்டரும், மனைவியும் வெளியில் நின்று மகனை அழைக்க, அவன் ஓடி வந்தான். மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் சென்றபோது, அடியவர் வடிவில் வந்த சிவன், அம்பிகையுடன் காட்சி தந்து, நால்வருக்கும் முக்தி கொடுத்து அருள்புரிந்தார். நான்கு அம்பாள்: முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு குழந்தை இல்லை. சிவபக்தரான அவர் புத்திரப்பேறுக்காக சிவனை வேண்டி யாகம் நடத்தினார். சிவன் அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்றார். ஒருசமயம் வேட்டையாடச் சென்றபோது மன்னர் 4 பெண் குழந்தைகளை கண்டார். அக்குழந்தைகளை வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை வாய்த்த திருகுகுழல் நாயகியாகவும், திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, கணபதீச்சரத்தில் சரிவார்குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள். தனிக்கோயில் அம்பிகை: அம்பிகையர் நால்வருக்கும், "சூலிகாம்பாள்' என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமுற்றாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்பமுடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயரும் உண்டு. "சூல்' என்றால் "கரு'வைக் குறிக்கும். வாதாபி கணபதி: ஒருசமயம் பரஞ்ஜோதி, போருக்குச் சென்றபோது அங்கிருந்த விநாயகரை வணங்கி போர் புரிந்தார், வெற்றி பெற்றார். வெற்றியின் அடையாளமாக விநாயகரை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். கஜமுகாசுரனை அழித்ததற்காக விநாயகர் தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தில், பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகே தமிழகத்தில் விநாயகருக்கு உருவ வழிபாடு உண்டானதாக சொல்வர். எனவே இவரை "ஆதிவிநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த விநாயகர், இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். சதுர்த்தி திதியில் விசேஷ பூஜை நடக்கிறது. விநாயகருக்கு சிவன் ஒரு மார்கழி மாத சதயம் நட்சத்திரத்துடன் கூடிய, சஷ்டி திதியன்று தோஷ நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் மார்கழி சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை, வழிபாடு மற்றும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. சிலையாய் அமைந்த சிவன்: ஒருசமயம் சிறுத்தொண்டருக்கு காட்சி தந்த சிவனுக்கு, இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிலை வடித்தார். ஆனால், பலமுறை சிலை சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த சிவனடியார் ஒருவர் தாகத்திற்கு நீர் கேட்டார். சிற்பிகள் சிலை அமையாத கோபத்தில், சிலை செய்ய வைத்திருந்த உலோக கலவையை கொடுத்துவிட்டனர். அதை அருந்திய அடியார், அப்படியே சிலையாக மாறினார். சிவனே, சிலையாக அமைந்ததை உணர்ந்த மன்னர் இங்கு பிரதிஷ்டை செய்தார். அப்போது அச்சிலையில் நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் தட்டவே காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. பின்பு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கவே ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையில் இவருக்கு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ சாத்தப்படுகிறது. சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்பு, சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய விசேஷ நாட்களில் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (சிவப்பு இரத்தம்) இப்பகுதியில் ஆறாக ஓடியதாம். எனவே இத்தலம் "திருச்செங்காட்டங்குடி' என்று அழைக்கப்படுகிறது. "ரத்தாரண்யக்ஷேத்ரம்' என்பது இத்தலத்தின் மற்றொரு பெயர். வரலாறு: யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே சிவன், "கணபதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார் அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார்.
மங்கை நல்லாள் என்பவரை மணந்து, சீராளன் என்னும் மகனைப் பெற்றார். தினமும் சிவத்தொண்டர்களுக்கு உணவு படைத்தபின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்த இத்தம்பதியினர், அடியார்கள் கேட்டதை இல்லை என்று சொல்லாமல் படைத்து வந்தனர்.
ஒருசமயம் சிறுத்தொண்டர் வீட்டிற்கு அடியார் யாரும் வரவில்லை. எனவே அடியாரைத்தேடி அவர் வெளியில் சென்றார். அப்போது சிவன், அடியார் வேடத்தில் அவரது இல்லத்திற்கு சென்றார். சிறுதொண்டரின் மனைவி திருவெண்காட்டுநங்கை, பணியாள் சீராளநங்கை அவரை வரவேற்று, சாப்பிட அழைத்தனர். கணவன் இல்லாத வீட்டில் சாப்பிட மறுத்த அவர், இக்கோயில் காட்டாத்தி மரத்தினடியில் இருப்பதாக சொல்லிவிட்டு இங்கு வந்தார். வீடு திரும்பிய சிறுத்தொண்டரிடம் மனைவி நடந்ததைக் கூறினார். மகிழ்ந்த சிறுதொண்டர் கோயிலுக்கு வந்து அடியாரை அழைத்தார். அவர் சிறுதொண்டரின் மகனை சமைத்து படைத்தால் மட்டுமே, உணவருந்த வருவதாக கூறினார். அவரும் ஏற்றுக்கொண்டு மகனை அறுத்து, சமைத்தார்.
சாப்பிடும் முன்பு அடியார், சிறுதொண்டரின் மகனையும் சாப்பிட அழைக்கும்படி கூறினார்.
இவரே இங்கு உத்திராபசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் காட்டாத்தி மரமும், சிறுத்தொண்டர் குடும்பத்தினருடன் காட்சி தருகின்றனர்.
பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது மட்டும் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.
அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவிழா: மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை, தீபாவளி.
தல சிறப்பு:
குபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்:குபேரனின் அருகில் லட்சுமிதேவி, தனலட்சுமியாகவும், தைரிய லட்சுமியாகவும் வடிவம் தாங்கி அமர்ந்திருப்பாள்.
தலபெருமை:
குபேரன் வரலாறு : பிரம்மாவின் மனதில் இருந்து புலஸ்தியர் என்ற மகன் தோன்றினார். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். விச்வரஸ் முனிவராயினும், சுமாலி என்ற அரக்கனின் மகள் கேகஸியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயின் குணநலத்துடன் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களே ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர். இதன் பின் விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர்.
இக்குடும்பத்தில் பிறந்த ஆண்மக்களில் ராவணனும், குபேரனும் சிவ பக்தர்கள். கும்பகர்ணன் தன் கொள்ளுத்தாத்தா பிரம்மாவின் பக்தன். விபீஷணன் பெருமாள் பக்தன். இது எதிலும் சேராமல் பெண் என்ற சொல்லுக்கே களங்கம் ஏற்படுத்த சூர்ப்பனகைக்கு பக்தியும் கிடையாது. பெண்ணுக்குரிய நாணமும் இல்லாமல், ஆணழகர்களை தேடித்திரியும் காமாந்தகாரி.
ராவணன் சிவபக்தனாயினும் பெண் பித்தன். கும்பகர்ணன் சாப்பாட்டு ராமன். விபீஷணனும், குபேரனும் தப்பிப் பிறந்தவர்கள். அசுரகுணங்கள் எதுவும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. ராவணன், சிவ பெருமானிடம் மனிதரைத் தவிர பிறரால் அழியக்கூடாது என்ற வரம் பெற்றவன். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனவன். மேலும் சிவபெருமான் உ<லகத்து செல்வம்முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு, அவரவர் விதிப்பயனுக்கேற்ப செல்வத்தைக் கொடுத்து வர கட்டளையிட்டார்.
இந்நிலையில், திருமாலின் மனைவியான மகாலட்சுமி,எட்டுவிதமான சக்திகளைப் பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவளது சக்திகள் அனைத்தையும் சங்கநிதி பதுமநிதி என்ற வாலிபர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்கு பிள்ளைகளாக நியமித்துக் கொண்டார் குபேரன்.
குபேரனின் இருபுறமும் இவர்கள் அமர்ந்தனர். குபேரன் அரசாட்சி நடத்த, அழுகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். இங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினான் குபேரன். கிரீடம், தங்க ஆபரணம் அணிந்து முத்துக்குடையின் கீழ் அமர்ந்த இவன், கையால் அபயமுத்திரை காட்டுவான். அதாவது, பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவரது பணி.
குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் "தஞ்சபுரீஸ்வரர்' எனப்பட்டார். ராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான். இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு "தஞ்சவூர்' என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் "தஞ்சாவூர்' ஆனதாக தல புராணம் குறிப்பிடுகிறது. குபேரபுரீஸ்வரர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் ரோட்டில் ஊர் எல்லையில் இக்கோயில் அமைந்துள்ளது.
இருப்பிடம் :
இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பத்மநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள்.
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
போன்: 0091-96778 ௧௮௧௧௪
அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில்

ஊர் / மாவட்டம் : கரூர்
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர் - கரூர் மாவட்டம். (இத்தலத்திற்கு அருகில் கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், அருங்கரை அம்மன் திருக்கோயில், கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில், ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.)
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
தல வரலாறு:
மூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்த டங்கணாச்சாரி என்பவர் தன் மனைவி சுந்தராம்பிகையுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மீது அன்பு கொண்டவர்.வேறு எந்தக்கடவுளையும் வணங்க மாட்டார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாத சுந்தராம்பிகை திருப்பதி வெங்கடாசலபதியிடம், தனக்கு குழந்தை பிறந்தால் ஐந்து வயதில் திருப்பதிக்கு கூட்டி வந்து மொட்டை போடுவதாக பிரார்த்தித்துக் கொண்டாள். வெங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள். தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சுந்தராம்பிகை குழந்தைக்காக வெங்கடா சலபதியிடம் வேண்டிக் கொண்டது டங்கணாச்சாரிக்கு தெரியாது. குழந்தையும் பிறந்தது.குழந்தைக்கு "குண்டலாச்சாரி' என பெயர் சூட்டினர். ஐந்து வயது ஆனதும் வேண்டிக் கொண்ட படி, நேர்த்திக்கடனை செலுத்த கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை. டங்கணாச்சாரி வெகுண்டார்.""இந்த உலகில் சிவனைத் தவிர சக்தியுள்ள கடவுள் வேறு யாருமில்லை. எனக்கு சிவன் அருளால் தான் குழந்தை பிறந்தது. நீ திருப்பதிக்கு செல்லக்கூடாது,'' எனக்கட்டளையிட்டார்.சுந்தராம்பிகை கலங்கினாள்.தவமிருந்து பெற்ற மகனுக்கு, வேண்டுதலை நிறைவேற் றாவிட்டால், ஏதாவது ஆபத்து வருமோ எனக்கலங்கினாள். இந்தக் கவலையில் அவளது உடல்நிலை மோசமானது. இதைச் சிறுவன் கவனித்தான். அம்மாவின் கவலைக்கு காரணம் கேட்டான். அவனுக்கு புரியும்படியாக அம்மா நடந்த விபரத்தைச் சொன்னாள்."" இதற்காகவா கவலைப் படுகிறாய்.நான் அந்த திருப்பதி வெங்கடாசலப் பெருமாளை இங்கேயே வரவழைக்கிறேன்,'' என்றான். அம்மா சிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள்.சிறுவன் தன் ஊரிலுள்ள தான்தோன்றி மலைக்கு சென்றான்.""திருப்பதி வெங்கடாசலபதியே! என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு வா. என் அம்மாவைக் காப்பாற்று. என் அம்மாவின் உயிர் போனால் நானும் இறந்து விடுவேன்,'' என்று அழுதான். அப்போது ஒரு துறவி அங்கு வந்தார்.அவனைத் தேற்றி அழுகைக்கான காரணம் கேட்டார். காரணத்தை தெரிந்து கொண்டு, ""இதற்காகவா அழுகிறாய்,'' என்றவர் நாம் இருவரும் சேர்ந்து இங்கு கோயில் கட்டுவோம். அதில் வெங்கடாசலபதியை எழுந்தருளச் செய்வோம். நீ உன்னால் முடிந்த சிறுகற்களை எடுத்து வா. நான் பெரிய கற்களை தூக்கி வந்து கோயிலை கட்டி முடிப்போம்,'' என்றார்.சிறுவன் சிறு கற்களைத் தூக்கி வந்தான். இதற்குள் இருட்டி விட்டது.மறுநாள் வருவதாக சொல்லி விட்டு குண்டலாச்சாரி வீட்டுக்கு போய் விட்டான். அடுத்த நாள் காலையில் அங்கு வந்த போது பெரிய கோயில் உருவாகி இருந்தது. சிறுவன் ஆச்சரியப்பட்டான். துறவியைக் காணவில்லை. இந்தத் தகவல் அரசனுக்கு போயிற்று. தன்னைக் கேட்காமல் கோயில் கட்டியவனை கொன்று விட அரசன் உத்தரவிட்டான். டங்கணாச்சாரி ஆவேசப் பட்டார். ""சிவன் இருக்க வேண்டிய ஊரில், விஷ்ணுவுக்கு கோயில் கட்டியவனை நானே அழித்து விடுகிறேன்,'' என்றவர் ஆவேசத்துடன் வந்து ஆத்திரம் கண்ணை மறைக்க கோயிலில் நின்ற தன் மகனையே அவசரத்தில் வெட்டிச் சாய்த்தார். இறந்தது தன் மகன் என்று அறிந்ததும் அரற்றினார்.சுந்தராம்பிகை நடந்ததை அறிந்து தட்டுத்தடுமாறி ஓடி வந்தாள். அப்போது வெங்கடேசப் பெருமான் அங்கு தோன்றி, சிறுவனை உயிர்ப்பித்தார். இனி இந்த தலத்திலும் நான் லட்சுமியுடன் குடியிருப்பேன் என்றார்.இப்போது இக்கோயில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது.
Hare Rama Hare Rama
எல்லாம் ராம கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. வனவாசம் சென்ற ராமனை மீண்டும் அயோத்திக்கு வரவழைத்து அரசை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுவதற்காக காட்டுக்குச் சென்று ராமனை சந்திக்கிறான் பரதன். ராமன், அவனை ஆறுதல்படுத்துகிறான். பல அறிவுரைகள் சொல்கிறான். அதுதான் ராம கீதை:
|அவனன்றி ஓரணுவும் அசையாது. உலக இயக்கம் அனைத்துமே அவனுடைய ஆணைப்படிதான் நடக்கும்.
மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப எதுவும் நடந்துவிடுவதில்லை. இறைவன் ஆட்டுவிக்கும் பொம்மைதான் மனிதன்.
|உறவு என்ற ஒரு பந்தம் ஏற்படுமானால் நிச்சயம் பிரிவு என்ற துறவுக்கும் தயாராக இருக்க வேண்டும். இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும். அமைதியாக இரு. உறவையும் பிரிவையும் இயல்பாக எடுத்துக்கொள்.
|யமுனை, கடலை நோக்கிச் செல்கிறது. ஆனால், மீண்டும் யமுனையாகவே அது கடலிலிருந்து திரும்ப முடியுமா? கடல் பரம்பொருள். அதனை நோக்கிச் சென்று சரணடைந்துவிட்டால் பரம்பொருளோடு ஐக்கியமாகிவிடும் பெரும்பேறு கிடைத்துவிடுகிறதே! நடந்துபோன சம்பவங்கள் நல்லனவே என்ற மன
உறுதிகொள். ஓர் இரவு, சூரியோதயத்தின்போது காணாமல் போனால் போனதுதான். அடுத்து புது இரவுதான் வருமே தவிர போன இரவு மீண்டும் வராது.
|கோடைகாலத்தில் சூரியனின் கிரணங்கள் தண்ணீரை உறிஞ்சி, ஆவியாக எடுத்துக்கொள்கின்றன. அந்தக் கிரணங்களைப் போலத்தான் ஒரு நாளின் இரவும் பகலும். இவை இரண்டும் நம் ஆயுளை நம்மிடமிருந்து
உறிஞ்சி எடுக்கின்றன. இவ்வாறு குறைவதை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறான் இறைவன். இன்னும் எத்தனை நாளோ என்ற கணக்கு தெரியாதபோது மகிழ்தலும், அழுதலும் ஏன்?
|பழுத்துவிட்டால், மரத்துடனான தன் தொடர்பை அறுத்துக்கொண்டு பழங்கள் மண்ணில் வீழ்கின்றன. தொடர்பறுப்பது பழமா அல்லது மரமா என்று ஆராய்வதைவிட பழுத்ததன் பலனாய் தொடர்பறுக்கும் பக்குவம் ஏற்பட்டு விடுவதை ஆழப் புரிந்துகொள்ள வேண்டும். மனம் பழுக்கும்போது மரணமோ, பிரிவோ ஒரு பிரச்னையாகவே இருக்க முடியாது. பழுத்துவிட்டேனே, மரத்திலிருந்து கீழே விழுந்து மண்ணுக்கு ஆவேனே, மீண்டும் நான் காயாய், பூவாய், மொட்டாய் மாற மாட்டேனா என்று அந்தப் பழம் ஏங்கினால் அது சாத்தியமாகுமா?
நாம் சந்திக்கிறோம், பிரிகிறோம். சந்திப்புக்கும் பிரிவுக்கும் இடைப்பட்ட பழக்கத்தில் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். சார்ந்து வாழ முற்படுகிறோம். பிரிதல் என்பது உண்டென்பதை சந்திப்பின்போதே நாம் பூரணமாக உணர்ந்துவிட்டால் பழக்கத்தில் உணர்ச்சிவசப்பட மாட்டோம்; அதனால் பிரிவில் வலி இருக்காது.
புதன், 14 ஏப்ரல், 2010
அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்
- மூலவர் : சரஸ்வதி
- ஊர் : கூத்தனூர்
- மாவட்டம் : திருவாரூர்
- தல சிறப்பு: சரஸ்வதி இங்கு கோயில் கொண்டிருப்பதை அறிந்ததும், இன்று காணாமல் போன சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து "ருத்ர கங்கை' என பெயர் பெற்றது. இதே ஊரிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேக நீர் இத்தீர்த்தத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. தற்போது "அரிசிலாறு' என்ற பெயரில் ஓடுகிறது. பித்ரு தர்ப்பணத்திற்கு இந்நதி மிகச்சிறந்த நதியாகும். தற்போது இந்நதி பலநாட்கள் காய்ந்தே கிடக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் வருகிறது.
- திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
- தகவல்: இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் "கூத்தனூர்' ஆனது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோயிலைக் கட்டினார் என்று தலபுராணம் சொல்கிறது. இவ்வூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். அதன் காரணமாகவே அவர் புகழ் பெற்ற கவிஞராக முடிந்தது என்கிறார்கள். இக்கோயில் ஒற்றைப் பிரகாரத்தைக் கொண்டது. ராஜகோபுரம் இருக்கிறது. பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி உள்ளனர். ஒட்டக்கூத்தருக்கு சிலை இருக்கிறது. சரஸ்வதியின் முன்னால் அன்ன வாகனம் உள்ளது. இதில் நர்த்தன விநாயகர் "சுயம்புமூர்த்தி'யாக இருக்கிறார்.சரஸ்வதி சிலை அமைப்பு: மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சரமாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும், கருணைபுரியும் இருவிழிகளும், "ஞானச்சஸ்' என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இக்கோயிலின் அருகில் புகழ் பெற்ற மாப்பிள்ளை சுவாமி' கோயில் இருக்கிறது. இந்த தலத்து சிவனை வழிபட்டால், திருமணத்தடையுள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் கல்யாணப்பந்தலே இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தல வரலாறு: பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, "இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது," என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால் தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமையடைகிறாள் என்றும் சொன்னார்.இருவருக்கும் இதுகுறித்து வாதம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்னையாகி பிரம்மனும், சரஸ்வதியும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் இருவரும் பூலோகத்தில் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கேற்ற வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். தம்பதிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை உலகத்தின் முன்னால் அவர்கள் நடத்திக்காட்டினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு," என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள். தமிழகத்தில் சரஸ்வதிக்கென மிகப்பெரிய தனிக்கோயில் கூத்தனூர் மட்டுமே. பிரம்மாவுக்கு அதிகமாக கோயில்கள் அமையாததால் அவரது மனைவியான சரஸ்வதிக்கும் இந்தியாவில் அதிக கோயில்கள் அமையாதது இயற்கையே. கூத்தனூர் சரஸ்வதி கோயிலிலும் பிரம்மாவுக்கு சிலை இல்லை. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
செல்லும் வழி:
திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்.
கும்பகோணத்தில் இருந்து திருநள்ளார் செல்லும் வழியில் பேரளம் என்னும் ஒரு ஊரில் இறங்கி பின்பு திருவாரூர் செல்லும் பேருந்தில் (மூன்றாவது பஸ் நிறுத்தம் ) பூந்தோட்டத்தில் இறந்கீகொள்ளவும் . ( சும்மார் ஒரு அறை கில்லோமீட்டர் தன இருக்கும் தூரம்)
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
274 சிவாலயங்கள்
- அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர்
- அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் (சிதம்பரம் நகர்),கடலூர்
- அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி,கடலூர்
- அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர்
- அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம்,,நாகப்பட்டினம்
- அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப் பள்ளி,,நாகப்பட்டினம்
- அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை,நாகப்பட்டினம்
- அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு,நாகப்பட்டினம்
- அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,நாகப்பட்டினம்
- அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம்
- அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம்
- அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திரிநின்றியூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வேள்விக்குடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமணஞ்சேரி,நாகப்பட்டினம்
- அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி,நாகப்பட்டினம்
- அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொருக்கை,நாகப்பட்டினம்
- அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு,நாகப்பட்டினம்
- அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா,நாகப்பட்டினம்
- அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு,நாகப்பட்டினம்
- அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்,கடலூர்
- அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்,கடலூர்
- அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர்,கடலூர்
- அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்,கடலூர்
- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர்
- அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்,தஞ்சாவூர்
- அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி,தஞ்சாவூர்
- அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், கொட்டையூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம்,தஞ்சாவூர்
- அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை,தஞ்சாவூர்
- அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில், திருவைகாவூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை,தஞ்சாவூர்
- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம்,தஞ்சாவூர்
- அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர்
- அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம்,தஞ்சாவூர்
- அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர்
- அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்,அரியலூர்
- அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர்,,தஞ்சாவூர்
- அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்,திருச்சி
- அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை,திருச்சி
- அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை,திருச்சி
- அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி திருவானைக்கா,திருச்சி
- அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி,திருச்சி
- அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி,திருச்சி
- அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை,திருச்சி
- அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர் மலை,கரூர்
- அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை,கரூர்
- அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை,திருச்சி
- அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி
- அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்,திருச்சி
- அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி,திருச்சி
- அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்,திருச்சி
- அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம்,திருச்சி
- அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,தஞ்சாவூர்
- அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில்,தஞ்சாவூர்
- அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி,தஞ்சாவூர்
- அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,,தஞ்சாவூர்
- அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை,தஞ்சாவூர்
- அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி,தஞ்சாவூர்
- அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை,தஞ்சாவூர்
- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில்,தஞ்சாவூர்
- அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி,தஞ்சாவூர்
- அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம்,தஞ்சாவூர்
- அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் (கோவந்தகுடி),தஞ்சாவூர்
- அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம்,தஞ்சாவூர்
- அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம்,தஞ்சாவூர்
- அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழ்பழையாறை வடதளி,தஞ்சாவூர்
- அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி,தஞ்சாவூர்
- அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர்
- அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை,தஞ்சாவூர்
- அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல்,நாகப்பட்டினம்
- அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம்,தஞ்சாவூர்
- அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை,நாகப்பட்டினம்
- அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்.,நாகப்பட்டினம்
- அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை,நாகப்பட்டினம்
- அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழப்பரசலூர்,,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில்,நாகப்பட்டினம்
- அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம்
- அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு,நாகப்பட்டினம்
- அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்,,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி,புதுச்சேரி
- அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி,,காரைக்கால்
- அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்,காரைக்கால்
- அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு,காரைக்கால்
- அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம்,திருவாரூர்
- அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர், அம்பல்,திருவாரூர்
- அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்,திருவாரூர்
- அருள்மிகு திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர்
- அருள்மிகு சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர்
- அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலப்பதி,திருவாரூர்
- அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்,திருவாரூர்
- அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், செருகுடி,திருவாரூர்
- அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,திருவாரூர்
- அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர்,திருவாரூர்
- அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி,திருவாரூர்
- அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,தஞ்சாவூர்
- அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர்
- அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சாக்கோட்டை,தஞ்சாவூர்
- அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம்,திருவாரூர்
- அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்,திருவாரூர்
- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொண்டீஸ்வரம்,திருவாரூர்
- அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர்,திருவாரூர்
- அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி,திருவாரூர்
- அருள்மிகு சரண்யபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,திருவாரூர்
- அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,திருவாரூர்
- அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,திருவாரூர்
- அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர்
- அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல்,நாகப்பட்டினம்
- அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை,நாகப்பட்டினம்
- அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர்
- அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர்
- அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல்,திருவாரூர்
- அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்,திருவாரூர்
- அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில்,திருவாரூர்
- அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழ வீதி,திருவாரூர்
- அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல்,திருவாரூர்
- அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம்,திருவாரூர்
- அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம்பேட்டை,திருவாரூர்
- அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு,திருவாரூர்
- அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்,திருவாரூர்
- அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை,தஞ்சாவூர்
- அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,தஞ்சாவூர்
- அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்,திருவாரூர்
- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம்,திருவாரூர்
- அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்,திருவாரூர்
- அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில்,தஞ்சாவூர்
- அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி,திருவாரூர்
- அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், பூவனூர்,திருவாரூர்
- அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி,திருவாரூர்
- அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்,திருவாரூர்
- அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்,திருவாரூர்
- அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம்,திருவாரூர்
- அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர்குளம்,திருவாரூர்
- அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில், தண்டலச்சேரி,திருவாரூர்
- அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்,திருவாரூர்
- அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை,திருவாரூர்
- அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர்,திருவாரூர்
- அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்,திருவாரூர்
- அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு,திருவாரூர்
- அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தங்கூர்,திருவாரூர்
- அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா,திருவாரூர்
- அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி,திருவாரூர்
- அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல்,திருவாரூர்
- அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்,திருவாரூர்
- அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம்,திருவாரூர்
- அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை,நாகப்பட்டினம்
- அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,,நாகப்பட்டினம்
- அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி,நாகப்பட்டினம்
- அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில், கோடியக்காடு,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை,மதுரை
- அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை,மதுரை
- அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்,மதுரை
- அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில், திருவேடகம்,மதுரை
- அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை,சிவகங்கை
- அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை
- அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல்,புதுக்கோட்டை
- அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்,ராமநாதபுரம்
- அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை,ராமநாதபுரம்
- அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்,சிவகங்கை
- அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம்,சிவகங்கை
- அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி,விருதுநகர்
- அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம்,திருநெல்வேலி
- அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி,திருநெல்வேலி
- அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி,கோயம்புத்தூர்
- அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர்
- அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி,ஈரோடு
- அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு,நாமக்கல்
- அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்,கரூர்
- அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி,ஈரோடு
- அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்,கரூர்
- அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை,கடலூர்
- அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்,கடலூர்
- அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்.,கடலூர்
- அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திர பட்டினம்,கடலூர்
- அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி,கடலூர்
- அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம்,,கடலூர்
- அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர்
- அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்,விழுப்புரம்
- அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம்,கடலூர்
- அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை,விழுப்புரம்
- அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர்,விழுப்புரம்
- அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர்,விழுப்புரம்
- அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், டி. இடையாறு,விழுப்புரம்
- அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்,விழுப்புரம்
- அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், திருத்தளூர்,கடலூர்
- அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில்,புதுச்சேரி
- அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி,கடலூர்
- அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர்,கடலூர்
- அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம்,விழுப்புரம்
- அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்,விழுப்புரம்
- அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்,விழுப்புரம்
- அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை,திருவண்ணாமலை
- அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி,காஞ்சிபுரம்
- அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம்,திருவண்ணாமலை
- அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல்,காஞ்சிபுரம்
- அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு,திருவண்ணாமலை
- அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு,திருவண்ணாமலை
- அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம்,வேலூர்
- அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர்,வேலூர்
- அருள்மிகு சலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம்,வேலூர்
- அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர்,காஞ்சிபுரம்
- அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம்,திருவள்ளூர்
- அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு,திருவள்ளூர்
- அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர்
- அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி,திருவள்ளூர்
- அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்,திருவள்ளூர்
- அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர்,திருவள்ளூர்
- அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம்,சென்னை
- அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில்,சென்னை
- அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு,காஞ்சிபுரம்
- அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை
- அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்,சென்னை
- அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், திருக்கச்சூர்,காஞ்சிபுரம்
- அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல்
- அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை,விழுப்புரம்
- அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு,விழுப்புரம்
- அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை,விழுப்புரம்
- அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவஞ்சிக்குளம்,திருச்சூர்
- அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்,உத்தர் கன்னடா
- அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்,கர்நூல்
- அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர்,விழுப்புரம்
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : வசிஷ்டேஸ்வரர்
கும்பகோணத்திலிருந்து (16 கி.மீ.) சென்னை செல்லும் வழியில் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கும்பகோணம்
விமான நிலையம் :
திருச்சி,
108 திவ்ய தேசங்கள்
- அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம்,திருச்சி
- அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர்,திருச்சி
- அருள்மிகு உத்தமர் திருக்கோயில், பிச்சாண்டார் கோவில் , திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவில்,திருச்சி
- அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில், திருவெள்ளறை,திருச்சி
- அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், அன்பில்,திருச்சி
- அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோவிலடி,தஞ்சாவூர்
- அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்,தஞ்சாவூர்
- அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ளம்பூதங்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர்
- அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோயில்,தஞ்சாவூர்
- அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை,தஞ்சாவூர்
- அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை,திருவாரூர்
- அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன்கோயில்,தஞ்சாவூர்
- அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்,திருவாரூர்
- அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், தலச்சங்காடு,நாகப்பட்டினம்
- அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திரு இந்தளூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி, திருநாங்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம்
- அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், சீர்காழி-திருநாங்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்செய்) திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில், வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்),நாகப்பட்டினம்
- அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி,நாகப்பட்டினம்
- அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி,நாகப்பட்டினம்
- அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில், திருத்தேவனார்த்தொகை, (திருநாங்கூர்),நாகப்பட்டினம்
- அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு அண்ணன் ( சீனிவாசன்) பெருமாள் திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்),நாகப்பட்டினம்
- அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்),நாகப்பட்டினம்
- அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர்
- அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்திபுரம்,கடலூர்
- அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோயிலூர்,விழுப்புரம்
- அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு உலகளந்த பெருமாள்(திருநீரகம்) திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு உலகளந்த பெருமாள் (திரு ஊரகம்) திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு உலகளந்த பெருமாள் (திருகாரகம்) திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு உலகளந்த பெருமாள் (திருக்கார்வானம்) திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி,காஞ்சிபுரம்
- அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர்,திருவள்ளூர்
- அருள்மிகு வீரராகவர் திருக்கோயில், திருவள்ளூர்,திருவள்ளூர்
- அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை,சென்னை
- அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை,காஞ்சிபுரம்
- அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை,காஞ்சிபுரம்
- அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்,வேலூர்
- அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம்
- அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு,பாலக்காடு
- அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம்
- அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம்
- அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப க்ஷேத்திரம்),பந்தனம் திட்டா
- அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம்
- அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்சிற்றாறு,ஆழப்புழா
- அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர்,ஆழப்புழா
- அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன் விளை,பந்தனம் திட்டா
- அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா
- அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்,திருவனந்தபுரம்
- அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு,கன்னியாகுமரி
- அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதிசாரம்,கன்னியாகுமரி
- அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி,திருநெல்வேலி
- அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி,திருநெல்வேலி
- அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம்,தூத்துக்குடி
- அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை),தூத்துக்குடி
- அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி,தூத்துக்குடி
- அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம்,தூத்துக்குடி
- அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம்,தூத்துக்குடி
- அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை,தூத்துக்குடி
- அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர்,தூத்துக்குடி
- அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை,தூத்துக்குடி
- அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி,தூத்துக்குடி
- அருள்மிகு வடபத்ரசாயி (ரங்கமன்னார், ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர்,விருதுநகர்
- அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்,விருதுநகர்
- அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை,மதுரை
- அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோவில்,மதுரை
- அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்,மதுரை
- அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர்,சிவகங்கை
- அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி,ராமநாதபுரம்
- அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்,புதுக்கோட்டை
- அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத்
- அருள்மிகு பிரகலாத வரதன் (அஹோபிலம்) திருக்கோயில், அஹோபிலம்,கர்நூல்
- அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், மேல்திருப்பதி,சித்தூர்





