«
The Spirit... The Soul...The Divine...The Inspired...The Sensitive Relationship 

சனி, 8 மே, 2010

Hare Rama Hare Rama

‘கீதை’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். குருக்ஷேத்திரப் போரில் மனச்சோர்வுற்ற அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் உபதேசித்தது. இந்த பகவத் கீதைக்கு முன்னோடிதான் ராம கீதை. ராமகீதை, ராமன் உரைத்த கீதை. உறவு பந்தம், சரணாகதி, மகிழ்தல், அழுதல், சந்திப்பு, பிரிவு, தொடர்பறுக்கும் பக்குவம்
எல்லாம் ராம கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. வனவாசம் சென்ற ராமனை மீண்டும் அயோத்திக்கு வரவழைத்து அரசை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுவதற்காக காட்டுக்குச் சென்று ராமனை சந்திக்கிறான் பரதன். ராமன், அவனை ஆறுதல்படுத்துகிறான். பல அறிவுரைகள் சொல்கிறான். அதுதான் ராம கீதை:
 |அவனன்றி ஓரணுவும் அசையாது. உலக இயக்கம் அனைத்துமே அவனுடைய ஆணைப்படிதான் நடக்கும்.
மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப எதுவும் நடந்துவிடுவதில்லை.  இறைவன் ஆட்டுவிக்கும் பொம்மைதான் மனிதன்.
 |உறவு என்ற ஒரு பந்தம் ஏற்படுமானால் நிச்சயம் பிரிவு என்ற துறவுக்கும் தயாராக இருக்க வேண்டும். இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும். அமைதியாக இரு. உறவையும் பிரிவையும் இயல்பாக எடுத்துக்கொள்.
 |யமுனை, கடலை நோக்கிச் செல்கிறது. ஆனால், மீண்டும் யமுனையாகவே அது கடலிலிருந்து திரும்ப முடியுமா? கடல் பரம்பொருள். அதனை நோக்கிச் சென்று சரணடைந்துவிட்டால் பரம்பொருளோடு ஐக்கியமாகிவிடும் பெரும்பேறு கிடைத்துவிடுகிறதே! நடந்துபோன சம்பவங்கள் நல்லனவே என்ற மன
உறுதிகொள். ஓர் இரவு, சூரியோதயத்தின்போது காணாமல் போனால் போனதுதான். அடுத்து புது இரவுதான் வருமே தவிர போன இரவு மீண்டும் வராது.
 |கோடைகாலத்தில் சூரியனின் கிரணங்கள் தண்ணீரை உறிஞ்சி, ஆவியாக எடுத்துக்கொள்கின்றன. அந்தக் கிரணங்களைப் போலத்தான் ஒரு நாளின் இரவும் பகலும். இவை இரண்டும் நம் ஆயுளை நம்மிடமிருந்து
உறிஞ்சி எடுக்கின்றன. இவ்வாறு குறைவதை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறான் இறைவன். இன்னும் எத்தனை நாளோ என்ற கணக்கு தெரியாதபோது மகிழ்தலும், அழுதலும் ஏன்?
 |பழுத்துவிட்டால், மரத்துடனான தன் தொடர்பை அறுத்துக்கொண்டு பழங்கள் மண்ணில் வீழ்கின்றன. தொடர்பறுப்பது பழமா அல்லது மரமா என்று ஆராய்வதைவிட பழுத்ததன் பலனாய் தொடர்பறுக்கும் பக்குவம் ஏற்பட்டு விடுவதை ஆழப் புரிந்துகொள்ள வேண்டும். மனம் பழுக்கும்போது மரணமோ, பிரிவோ ஒரு பிரச்னையாகவே இருக்க முடியாது. பழுத்துவிட்டேனே, மரத்திலிருந்து கீழே விழுந்து மண்ணுக்கு ஆவேனே, மீண்டும் நான் காயாய், பூவாய், மொட்டாய் மாற மாட்டேனா என்று அந்தப் பழம் ஏங்கினால் அது சாத்தியமாகுமா?
நாம் சந்திக்கிறோம், பிரிகிறோம். சந்திப்புக்கும் பிரிவுக்கும் இடைப்பட்ட பழக்கத்தில் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். சார்ந்து வாழ முற்படுகிறோம். பிரிதல் என்பது உண்டென்பதை சந்திப்பின்போதே நாம் பூரணமாக உணர்ந்துவிட்டால் பழக்கத்தில் உணர்ச்சிவசப்பட மாட்டோம்; அதனால் பிரிவில் வலி இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக